தமிழக செய்திகள்

திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு இன்று (10-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து இன்று காலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கைப்பேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தி ஆகியவற்றை காண்பித்த பின்னரே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...