கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஊட்டி மலை ரெயில் சேவை 31-ம் தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் சேவை 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் தண்டவாளத்தில் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் மலை ரெயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைரெயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அத்துடன் மலைரெயில் பாதையில் உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே வருகிற 31-ந் தேதி வரை மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை