தமிழக செய்திகள்

ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி

நீலகிரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி பெற்றது.

தினத்தந்தி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ டிவிஷன், பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்தநிலையில் ஏ டிவிஷன் பிரிவில் ஊட்டியை சேர்ந்த ஸ்பார்டன் மற்றும் பிளாசம்ஸ் அணிகள் விளையாடின. 35 ஓவர்கள் கொண்ட போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்பார்டன் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் நந்தகுமார் 45 ரன்கள், இம்மானுவேல் 35 ரன்கள், கருணாகரன் 26 ரன்கள் எடுத்தனர். பிளாசம்ஸ் அணியின் பந்து வீச்சாளர் அசரப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 210 பந்துகளில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய பிளாசம்ஸ் அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஸ்பார்டன் அணியின் பந்து வீச்சாளர் திமோத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஊட்டி ஸ்பார்டன் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை