தமிழக செய்திகள்

திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் 27-ந்தேதி தொடக்கம்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள், வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் மாதம் 23-ந்தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள், வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் மாதம் 23-ந்தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்விற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஹால்டிக்கெட் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். செய்முறை தேர்வுக்கான தனி ஹால்டிக்கெட் இணையதளம் மூலம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை