தமிழக செய்திகள்

சீர்காழியில் அங்கன்வாடி மையம் திறப்பு

சீர்காழியில் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

தினத்தந்தி

சீர்காழி:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தாடாளன் மேல வீதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, ஒன்றிய பொறியாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசபை உறுப்பினர் நாகரத்தினம் செந்தில் வரவேற்று பேசினார். விழாவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய செல்வி, தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் நன்றி கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு