தமிழக செய்திகள்

நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிழா நடைபெற்றது, நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.டி.அரசு, தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எடையாத்தூர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வெங்கட்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துண்ட காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு