மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரூ.20 லட்சத்தில் மாவட்ட அமர்வு, முதன்மை குற்றவியல் கோர்ட்டுகள் திறந்து வைக்கப்பட்டன.
கோர்ட்டுகள் திறப்பு
மயிலாடுதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் முதன்மை குற்றவியல் கோர்ட்டுகள் திறப்பு விழா நேற்று நடந்தது. மதுரையில் நேற்று நடந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் நடந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு ஆகியோர் காணொலி வாயிலாக திறந்து வைத்தனர்.
நீதிபதிகள்
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தாரணி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி புதிய கோர்ட்டுகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, நாகை மாவட்ட முதன்மை நீதிபதி கந்தகுமார், மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி இளங்கோ, ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.