வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு தாலுகா ஜெய்ந்த் நகரில் கூட்டுறவுத்துறை மூலம் நடமாடும் ரேஷன் கடையினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். மேலும் 6 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளையும், 3 பயனாளிகளுக்கு பால் கறவை மாட்டு கடனுதவிகளையும், 8 பயனாளிகளுக்கு பயிர் கடனுதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல பெண் போலீசாரின் பொன் விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து 100 பெண் போலீசார் விருதுநகருக்கு வந்த சைக்கிள் பேரணியை கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் ஆகியோர் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.