தமிழக செய்திகள்

புதிய சமையல் அறை-நிழற்குடை திறப்பு

புதிய சமையல் அறை-நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

தரகம்பட்டி அருகே உள்ள காளையாப்பட்டி ஊராட்சி சின்னாண்டிப்பட்டியில் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிய நிழற்குடை, கீழப்பகுதி ஊராட்சி சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 86 ஆயிரத்தில் புதிய சமையலறை கூடம் கட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து நிதி ஒதுக்கீடு பணிகள் நிறைவடைந்தது.இதைத்தொடர்ந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி கலந்து கொண்டு, மேற்கண்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில், காளையாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியமேரி மரியலூயிஸ், கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், ஒன்றிய கவுன்சிலர்கள் தரகம்பட்டி கோமதி, வரவனை கிருஷ்ணகுமாரி, மேற்கு ஒன்றிய துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கிளைக்கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை