புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுதேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது விடுமுறை முடிவடைந்து புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. ஒருசில தனியார் பள்ளிகள் 6 மற்றும் 13ந்தேதிகளில் திறக்கப்பட உள்ளன.
தனியார் பள்ளிகள் சார்பில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறந்த உடன் இன்றே புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.