கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஈரோடு,

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி திறக்கப்பட்டன. பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

வகுப்புக்கு 25 மாணவர்கள், கட்டாய முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும், சில பள்ளிகளில் கொரோனா தாக்கம் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் தவறானது. 2 ஆசிரியர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை