தமிழக செய்திகள்

மேலும் 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு; இனிப்பு வழங்கி கொண்டாடிய மதுப்பிரியர்கள்

திருப்பூர் உள்ளிட்ட மேலும் 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இனிப்பு வழங்கி கொண்டாடிய மதுப்பிரியர்கள்.

சென்னை

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நோய்த் தொற்று குறையத்தொடங்கியதைத் தொடந்து ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்ளில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 253 டாஸ்மாக் கடைகளும் இன்று காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் 55 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைத் கொண்டாடும் வகையில் மதுப்பிரியர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அதே போல, மாநகரில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளின் முன்பாகவும் மதுப்பிரியர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

மேலும், அனைத்து மதுக்கடைகளிலும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு முககவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வரும் நபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு