சென்னை,
ஆந்திராவின் கண்டெலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 735 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 140 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று சென்னைக்கான தண்ணீரை பொதுப்பணித்துறையினர் மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மலர் தூவி திறந்து வைத்தனர்.