தமிழக செய்திகள்

நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் தற்போது அரசியல் செய்கின்றன. திமுக அரசை தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர். தினந்தோறும் தன்னை பற்றி செய்தி வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்திருக்கிறது.

நெல் ஈரப்பத அளவை உயர்த்த மறுத்துவிட்டு வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். விவசாயிகள் விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜக இரட்டை வேடம் போடுகிறார்கள். ஆக்கப்பூர்வமான வேலையை செய்யாமல் தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்