தமிழக செய்திகள்

கோவில் அருகே கழிப்பறை கட்ட எதிர்ப்பு: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

கூடலூரில் கோவில் அருகே கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை யிட்டனர்.

கழிப்பறை கட்ட எதிர்ப்பு

கூடலூர் நகராட்சி 6-வது வார்டு அருந்ததியர் தெரு பகுதியையொட்டி குள்ளப்ப கவுண்டன்பட்டி செல்லும் சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் செலவில் ஆண்கள் பொது கழிப்பறை வளாகம் கட்ட நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் பள்ளிக்கூடம், கோவில், பெண்கள் கழிப்பறை மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இதனால் இந்த பகுதியில் ஆண்கள் கழிப்பறை கட்ட கூடாது என்று பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வேறு இடத்தை தேர்வு செய்து கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக தெற்கு போலீஸ் நிலையம், நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவும் கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆண்கள் கழிப்பறை வளாகம் கட்டவேண்டும் என்று அப்பகுதி ஆண்களும் போலீஸ் நிலையம், நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

வாக்குவாதம்

அப்போது நகராட்சி ஆணையாளர் காஞ்சனா மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடும் ஏதும் ஏற்படவில்லை. இதற்கிடையே கட்டுமான பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டுவந்து முற்றுகை.யிட்டனர்.

இதையறிந்த மற்றொரு தரப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி ஊழியாகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...