சென்னை
தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும் உள்ளன. இதன் கவுன்சிலர்களே மேயர் நகராட்சி சேர்மன் மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வார்கள். இதேபோல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
இந்த மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என ஐகோர்ட் மதுரைக் கிளை கூறி உள்ளது.