தமிழக செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; கோலம் வரைந்து போராட்டம் நடத்திய மாணவிகள் கைது

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிரமுடன் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்தது.

இதனால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். வன்முறை சம்பவங்களில் பலர் பலியாகினர். காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் மாணவியர் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அடையாறு சாஸ்திரி நகர் பேலீசார் கேலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர். எனினும், சில மாணவிகள் அந்த இடத்தில் இருந்து நகராமல் இருந்தனர்.

இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேலீசார் அவர்களை விடுவித்து விட்டனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை