தமிழக செய்திகள்

ஓசூர் அருகே மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி - மயக்கம்

ஓசூர் அருகே மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேக்கர் நகர் குடியிருப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் தண்ணீர் விநியேகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் விநியேகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டேருக்கு திடீரென உடல்நலம் பாதித்தது. வாந்தி - மயக்கம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டேர் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

மாநகர நல அலுவலர் தலைமையில் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்