தமிழக செய்திகள்

மதுரையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உயிரிழப்பு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் மதுரையில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தங்கியிருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

புதிதாக 300 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,003 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள் பட்டியலில் மதுரை, 2-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்