தமிழக செய்திகள்

ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவர் பார்வையிட்டார்.

சோளிங்கரை அடுத்த ஐப்பேடு கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதாக ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி பெருமாளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் பார்வையிட்டார். ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து அதே பகுதியில் பஜனை கோவில் தெருவிற்கு 15-வது மானியக்குழு நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஒன்றியக்குழு தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்