தமிழக செய்திகள்

ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தினத்தந்தி

கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் விழல்கோட்டகம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த தொட்டியின் சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருகிறது.

கிராம மக்கள் அச்சம்

சில இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன. மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அருகே அரசு பள்ளி மற்றும் நூலகம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொட்டி திடீரென இடிந்து விழுந்து விடும் ஆபத்தும் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். சேதம் அடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும். அல்லது அதனை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை