தமிழக செய்திகள்

தேசியக்கொடி வண்ணத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ஓணாங்குடி ஊராட்சியில் தேசியக்கொடி வண்ணத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

அரிமளம் ஊராட்சி ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஊராட்சி 15-வது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய கொடி வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் கூறுகையில், எங்களது ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தேசிய கொடி வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. நாட்டுப்பற்றுடன் அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு உயர்ந்து நிற்கும் கோபுரம் போன்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேசியக்கொடி வண்ணத்தை அமைத்துள்ளோம். ஒவ்வொருவரும் குடிநீர் அருந்தும் பொழுது நமது தேசப்பற்றை நினைவுகூரும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை அமைத்துள்ளோம், என்றார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு