தமிழக செய்திகள்

வயலில் கவிழ்ந்த கார்

வயலில் கார் கவிழ்ந்தது.

தினத்தந்தி

தொண்டி, 

திருவாடானை தாலுகா பழையன கோட்டை கிராமத்தில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கார் ஒன்று வளைவில் திரும்பும் போது சாலை ஓரத்தில் இருந்த வயலில் தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்த மானாமதுரையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த பகுதியில் கொண்டைஊசி போன்ற வளைவு உள்ளதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

இங்கு சாலையின் வளைவை குறிக்கும் வகையில் எந்த ஒரு பலகையும் இல்லை. எனவே, இப்பகுதியில் சாலை ஓரத்தில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை