தமிழக செய்திகள்

எருது விடும் விழா

எருது விடும் விழாவை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சிக்குட்பட்ட மாங்குப்பம் கிராமத்தில் பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு 44-வது ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. விழாவை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மிக குறைந்த நேரத்தில் ஓடி எல்லையை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.85 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.73 ஆயிரம் உள்ளிட்ட 56 பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், தேசிய பிராணிகள் பாதுகப்பு நலவாரிய உறுப்பினரும், ஜல்லிக்கட்டு மேற்பார்வையாளருமான எஸ்.கே.மிட்டல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் போட்டியில் கலந்து கொண்டன. எருதுகளை அடக்க முயன்ற வாலிபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை