தமிழக செய்திகள்

ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3,237 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் - ரயில்வே துறை தகவல்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு இதுவரை 3,237 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனாவால் எழுந்துள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரெயில்வேயும் களத்தில் இறங்கி இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதன்படி நாடு முழுவதும் இதுவரை 376 ரயில்கள் மூலம் 1,534 டேங்கர்களில் 26,281 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வேத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு இதுவரை 3,237 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரெயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், மராட்டிய மாநிலம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை ஆக்சிஜன் எக்பிரஸ் மூலம் ஆக்சிஜன் பெற்றுள்ளதாக ரெயில்வே கூறியுள்ளது. தற்போது 483 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு 6 ஆக்சிஜன் ரெயில்கள் பயணத்தில் உள்ளதாக ரெயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை