தமிழக செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2-ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.

தூத்துக்குடி,

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தயாரிக்கும் தொடங்கி பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது. முதல் அலகில் மே 13 முதல் 30 டன்னுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தியாகும் நிலையில் 2-வது அலகிலும் இன்று உற்பத்தி தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் தலா 500 மெ.டன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு ஆக்சிஜன் அலகுகள் உள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு