ஆலந்தூர்,
இந்தியா முழுவதும் கொரோனா 2-ம் அலை பரவல் மோசமான நிலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் பலா ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனா. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
எனவே ஆக்சிஜன் உற்பத்தியை நாடு முழுவதும் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதையடுத்து தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டொலைட் ஆலையை 3 மாதங்களுக்கு மட்டும் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல் நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமித்து வைக்க சிலிண்டாகளுக்கும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிலிண்டாகள் வந்தன
இதை அறிந்து கொண்ட வெளிநாடுகள் ஆக்சிஜன் சேமித்து வைப்பதற்கான கன்டெய்னாகள், ஆக்சிஜன் சிலிண்டாகளை இந்தியாவிற்கு கொடுத்து உதவ முன்வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சரக்கு விமானமான சி-17 ரக விமானத்தில் ஜொமனிலிருந்து 4 கிரயோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னாகளும், பிரிட்டனில் உள்ள பிரைஸ் நாடன் நகரில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டாகளையும் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு நேற்று வந்தது.
இவை திருவள்ளூருக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டாகள் தட்டுப்பாடு உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.