தமிழக செய்திகள்

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: ஓவியரின் மனைவியிடம் செல்போனில் பேசிய மத்திய மந்திரி எல்.முருகன்

குடும்பத்திற்கும், குழந்தைகளின் கல்விக்கும் தேவையான உதவிகளை செய்வதாக மத்திய மந்திரி எல்.முருகன் உறுதியளித்தார்.

தினத்தந்தி

மேட்டுப்பாளையம்,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த பழங்குடியின குரும்பா ஓவியர் கிருஷ்ணன். இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையே அவர் இறந்து விட்டார். அவருக்கு பத்மஸ்ரீ விருதை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்தநிலையில் நேற்று மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பாக்கு தோப்பில் குடிசை வீட்டில் வசித்து வரும் கிருஷ்ணனின் மனைவி சுசீலா மற்றும் அவர்களது குழந்தைகளை பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ்குமார் நேரில் சந்தித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மத்திய இணை மந்திரி எல்.முருகன், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட கிருஷ்ணனின் மனைவி சுசீலாவிடம் செல்போனில் பேசினார்.

அத்துடன் குடும்பத்திற்கும், குழந்தைகளின் கல்விக்கும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். அப்போது சுசீலா கண்ணீர் மல்க, மத்திய இணை மந்திரிக்கு நன்றி தெரிவித்தார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை