தமிழக செய்திகள்

திருச்செந்தூர்-மணியாச்சி இடையே பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் 4 நாட்கள் பகுதியாக ரத்து

பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலானது இன்று முதல் 29ம் தேதி வரை மணியாச்சியிலிருந்து மதியம் 2 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும்.

தினத்தந்தி

தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்செந்தூரில் இருந்து தினந்தோறும் பாலக்காடு செல்லும் முன்பதிவில்லாத பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில், இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (நவம்பர் 25) முதல் நவம்பர் 29ம் தேதி வரை வாஞ்சிமணியாச்சி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16732) பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16731) ஆகிய 2 ரெயில்களும் நவம்பர் 25, 26, 28, 29 ஆகிய 4 நாட்கள் வாஞ்சிமணியாச்சி-திருச்செந்தூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் இந்த ரெயிலானது மணியாச்சியிலிருந்து மதியம் 2 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு