தமிழக செய்திகள்

பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவிற்கு, நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - கோயில் நிர்வாகம்

பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவிற்கு, நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

பழனி,

பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வௌளியானை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில் பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவிற்கு, நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. அதேவேளையில், கோவில் நிர்வாகம் சார்பில் இன்று தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை