தமிழக செய்திகள்

பழனிசாமியால் எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

’தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது. தலைவர் கலைஞர் ஒரு சிங்கம். அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்!

பண்பற்ற பழனிசாமி அவர்களே, தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல!

எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள். மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.