தமிழக செய்திகள்

ரூ.70 லட்சம் மோசடி செய்த பலே தம்பதி... போலீசார் வலைவீச்சு

தம்பதி இருவரும் பணத்தை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

விருதுநகர்,

ராஜபாளையம் அருகே நூற்பாலையில் சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கி மோசடி செய்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆர்.ரெட்டியப்பட்டி பகுதியில் நூற்பாலை விற்பனை பிரதிநிதியாக இருந்து வரும் வெங்கடேஷ் என்பவர் செவ்வாய்ப்பேட்டையில் ஆலை நடத்திவரும் மணிவண்ணன்-சசிகலா தம்பதிக்கு ஆர்டரின் பெயரில் பல தவணைகளில் சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு நூல்களை விற்பனை செய்துள்ளார்.

ஆனால் தம்பதி இருவரும் பணத்தை திருப்பி தராமல் வெங்கடேசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாக உள்ள தம்பதியை தேடி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு