தமிழக செய்திகள்

பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் இன்று உயிரிழந்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையராக இருந்து வந்தவர் ஈஸ்வரன். சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரனுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வந்த உதவி ஆணையர் ஈஸ்வரன் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த உதவி ஆணையர் ஈஸ்வரன் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் இரண்டாவது அலை பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை சென்னை மாநகர காவல்துறையில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம், காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை