தமிழக செய்திகள்

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

ஆண்டிப்பட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பந்துவார்பட்டி குளத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

அர்ப்பணம் மது போதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் சார்பில், ஆண்டிப்பட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பந்துவார்பட்டி குளத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். அர்ப்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மைய இயக்குனர்கள் சதீஷ், வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் குளத்து கரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசுத் துறை அதிகாரிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்