தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு ஊராட்சி மன்ற ஊழியர் தற்கொலை

தூக்குப்போட்டு ஊராட்சி மன்ற ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் கரியமால் (வயது 58). இவர் ஊராட்சி மன்றத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கரியமால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.