தமிழக செய்திகள்

கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை

கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் ராம்குமார் (30). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார்.

வாலாஜாபாத் அருகே தென்னேரி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் பூசிவாக்கம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ராஜ்குமார் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி, சினிமா, கடற்கரை போன்ற பல இடங்களுக்கு அவருடன் சுற்றி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

பாதிக்கப்பட்ட பெண் காஞ்சீபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2017-ம் ஆண்டு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சசிரேகா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி ராம்குமாருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்