தமிழக செய்திகள்

பாரா ஆசிய விளையாட்டு போட்டி; வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தினத்தந்தி

சென்னை,

பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்