தமிழக செய்திகள்

பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை‌ உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூக்கள் சந்தை

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.250-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.140-க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.50-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

கனகாம்பரம் ரூ.500

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ150-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லை பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

மகாளய அமாவாசையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை