பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நித்தியா வரவேற்றார். கூட்டத்தில் தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதால், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வீட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மழைக்காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய பொறியாளர்கள் கிருஷ்ணகுமார், சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலெக்சாண்டர், ரவிச்சந்திரன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், அலுவலகப்பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய குழு துணை தலைவர் மோகனசுந்தரம் நன்றி கூறினார்.