தமிழக செய்திகள்

அங்கன்வாடி மையம் கட்டக்கோரி குழந்தைகளுடன் பெற்றோர்கள் போராட்டம்

நெல்லை அருகே அங்கன்வாடி மையம் கட்டக்கோரி குழந்தைகளுடன் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

பேட்டை:

நெல்லையை அடுத்த கொண்டாநகரத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. தற்போது அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, பழைய கட்டிடம் இருந்த இடத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த பாப்பாக்குடி யூனியன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், புதிய அங்கன்வாடி மைய கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு