தமிழக செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தடை

ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது.

தினத்தந்தி

பென்னாகரம்,

கர்நாடகா, கேரள மாநிலங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரிநீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீவரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்குவதற்கு மீண்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளித்திருந்த நிலையில், மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலில் 34 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை