கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் - ஒரே நாளில் 258 மனுக்கள் தாக்கல்

39 மக்களவை தொகுதிகளிலும் இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 22 வேட்புமனுக்கள் தாக்கலாகின. 21-ந்தேதி 9 மனுக்களும், 22-ந்தேதி 47 மனுக்களும் பெறப்பட்டன. 23-ந்தேதி (சனி) மற்றும் 24-ந்தேதி (ஞாயிறு) ஆகிய 2 தினங்கள் வேட்புமனுத்தாக்கல் நடைபெறவில்லை.

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வேட்புமனுத்தாக்கல் செய்ய ஆர்வம் காட்டினார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் குவிந்ததால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 405 வேட்புமனுக்கள் தாக்கலாகியது. வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று 258 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரையில் மொத்தம் 751 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்