தமிழக செய்திகள்

நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

தினத்தந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி நளினி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி பரோல் வழங்கப்பட்டது.

தன்னுடைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். அவர் தங்கி உள்ள வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நளினியின் பரோல் கடந்த மாதம் 9-வது முறையாக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் நளினிக்கு 10-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை