தமிழக செய்திகள்

பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் 74 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைக்காக மேலும் 74 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது .

தினத்தந்தி

சென்னை, 

சென்னையின் முக்கியமான ரெயில் நிலைய வளாகத்தில் 548 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருட்டு, கொலை, விபத்து போன்ற குற்றங்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்டுபிடிக்க ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மேலும் 74 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை மற்றும் எழும்பூர் முதல் விழுப்புரம் வரை 26 ரெயில் நிலையங்களில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுற்கு வரும்.

சென்னை-கூடூர் பகுதியில் 17 ரெயில் நிலையங்களில் அடுத்த ஆண்டு (2024) ஜூன் 30 தேதிக்குள் பணி முடிவடையும். சென்னை-ஜோலார்பேட்டை மற்றும் அரக்கோணம் வரை 31 ரெயில் நிலையங்களில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 31 தேதிக்குள் இப்பணிகள் முடிவடையும்.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து