தமிழக செய்திகள்

ரூ.7 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை

சோளிங்கரில் ரூ.7 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடையை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தினத்தந்தி

சோளிங்கர், 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் கோபால், நகராட்சி துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை ரிப்பன் வெட்டியும், கல்வெட்டை திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றினார்.

தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கல்பனா, வழக்கறிஞர் தனசேகரன், மாவட்ட பிரதிநிதி ஷாஷிக்குமார், நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை