உதகை பேருந்து நிலையம் 
தமிழக செய்திகள்

பேருந்துகள் பற்றாக்குறையால் பயணிகள் அவதி! உதகையில் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

காவலர்கள், பொதுமக்களை புறக்கணித்துவிட்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் பேருந்துகளில் இருக்கைகள் பிடித்து கொடுத்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர்.

உதகை,

தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப முடியாமல், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்ட தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிகள் மற்றும் பணியிடங்களுக்கு திரும்புவதற்காக, உதகை மத்திய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.

பொதுமக்கள் அதிருப்தி

ஆனால், சமவெளி பகுதிகளுக்கு செல்ல போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்தியடைந்தனர். இதற்கிடையே, கூட்டத்தை கட்டுப்படுத்த வந்த காவலர்கள், பொதுமக்களை புறக்கணித்துவிட்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் பேருந்துகளில் இருக்கைகள் பிடித்து கொடுத்ததாக பயணிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

பொதுமக்கள் வாக்குவாதம்

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், பேருந்துகளை மறித்து அதன் முன் நின்று போக்குவரத்து அதிகாரிகளுடனும், போலீசாருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் உதகை மத்திய பேருந்து நிலையமே போர்க்களம் போலக் காட்சியளித்ததோடு, அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT