தமிழக செய்திகள்

சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி பலி

சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழந்தது.

தினத்தந்தி

சமயபுரம்:

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு புள்ளிமான் சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த அந்த மான், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.வெயிலின் காரணமாக தண்ணீரை தேடி அந்த மான் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்