தமிழக செய்திகள்

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் தூய்மை பணி

தூய்மை இருவார தினம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் 49-வது நிறுவன தினத்தையொட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று சுத்தப்படுத்தும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

சென்னை மண்டல இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு, ஏ.ஐ.ஜி. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்டான்லி ஆஸ்பத்திரி டாக்டர் பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பொது மேலாளர் பிதாபஸ் சாரங்கி, தென் மண்டல மனித வளமேம்பாட்டு பிரிவு தலைமை அதிகாரி ஆர்.நடராஜன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் தூய்மை தொடர்பான உறுதிமொழி எடுத்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 227 பேர் கலந்து கொண்டனர். பட்டினப்பாக்கம் கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள் பைகளில் போடப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்துஸ்தான் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது