தமிழக செய்திகள்

3-வது நினைவு தினம்: வாஜ்பாய் உருவ படத்துக்கு அஞ்சலி

பா.ஜ.க.வை நிறுவியவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி தனது 93-வது வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். வாஜ்பாயின் 3-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வாஜ்பாயின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அவரது உருவப்படத்துக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.