தமிழக செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் உள்ளாட்சி, வாரியம், பல்கலை., கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தை பெறுவார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு